வருமானமிழந்ததால் ஆட்டோ ஓட்டும் நடிகை!

கொரோனா வைரஸ் பலருடைய வாழ்க்கையை திருப்பி போட்டிருக்கிறது. நடிகைகள் பலரும் யூ டியூப் சேனல் ஆரம்பித்து புதிய வருமானத்திற்கான வழிகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலரோ சொந்தமாக பிசினஸ் செய்கின்றனர். தமிழில் இயக்குனர் ஒருவர் கூட மளிகை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் கேரளாவில் ஒரு நடிகை ஆட்டோ ஓட்டுகிறார். அவரது பெயர் மஞ்சு. 36 வயதான மஞ்சு கடந்த 15 வருடங்களாக நாடகத்தில் நடித்து வருகிறார். சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

தற்போது கொரோனா காலத்தில் நாடகமும் நடக்கவில்லை. சினிமா படப்பிடிப்பும் இல்லை. இதனால் வருமானம் இழந்து தவித்தவர், இருக்கிற பணத்தை கொண்டு ஒரு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவை வாங்கி ஓட்டிவருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here