வாங்கிய கடனிற்காக மனைவியை விற்பனை செய்த கணவன்: யாழில் அதிர்ச்சி சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல், தனது மனைவியை விற்பனை செய்த ஆசாமியை தேடிப்பிடித்து இளைஞர்கள் நையப்புடைத்துள்ளனர்.

யாழ்ப்பாணம், தெல்லிப்பழையை சேர்ந்த குடிகார கணவன் ஒருவரே தனது மனைவியை விற்பனை செய்துள்ளார்.

இந்த நபர் ஒரு தொகை பணத்தை அண்மையில் கடன் வாங்கியுள்ளார். எனினும், அந்த பணத்தை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதையடுத்து தனது மனைவியை, கடன் கொடுத்துள்ளார்.

தனது மனைவியை யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதியொன்றிற்கு வேலைக்கு என சொல்லி அழைத்து வந்து விட்டுள்ளார். பின்னர், நபரொருவர் அந்த பெண்ணுடன் அத்துமீறி நடக்க முனைந்துள்ளார். அத்துடன், தன்னிடம் வாங்கிய கடனிற்காக அவர் விற்பனை செய்யப்பட்டு விட்டார் என, அவரது கணவன் எழுதிக் கொடுத்த ஆவணத்தையும் காண்பித்துள்ளார்.

இந்த கடிதத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த மனைவி, அந்த நபரை அடித்து துவைத்ததுடன், கத்திக்கூச்சலிட்டபடி வீதிக்கு வந்தார்.

இதையடுத்து அங்கு குவிந்த இளைஞர்கள், அந்த நபரை நையப்புடைத்தனர்.

பின்னர், அந்த பெண்ணுடன் இணைந்து, மனைவியை விற்பனை செய்த ஆசாமியை தேடிப்பிடித்து அவரும் நையப்புடைக்கப்பட்டார். தனது கணவன் மீது மனைவி இன்று பொலிஸ் நிலையத்தில் முறையிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here