‘மண்டையில் போட வேண்டியவர்களை கூட்டமைப்பிற்குள் கொண்டு வருகிறாயா?’: அம்மான் வெளியிடும் அதிர்ச்சி தகவல்!


தமிழ் தேசிய கூட்டமைப்பை நான்தான் உருவாக்கினேன். கூட்டமைப்பை உருவாக்கலாமென தலைவரிடம் சொன்னபோது, நான் சுடச் சொன்னவர்களையெல்லாம் கூட்டமைப்பிற்குள் கொண்டு வருகிறாயா என கேட்டார். நான் செய்த பிழை, தலைவர் சொன்னதை அன்று செய்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் விநாயகமூர்த்தி முரளிதரன்.

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் நேற்று முன்தினம் (1) நடந்த பிரச்சார கூட்டத்தில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியது நான்தான். சிவராம் என்ற பத்திரிகையாளர்தான் என்னிடம் வந்து, நமது பிரச்சனைகளை ஜனநாயக வழியில் பேச கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றார். நான் இதை தலைவரிடம் போய் சொன்னேன். நான் சுடச்சொன்னவனையெல்லாம் என்னிடம் கொண்டு வருகிறாயா என கேட்டார். அதுதான் நான் விட்ட பிழை. அவர் சொன்னதை அன்று செய்திருக்க வேண்டும்.

இல்லையண்ணை செய்ய வேண்டுமென கூறி, ஒரு மாதிரி சம்மதிக்க வைத்து, ஆட்களை வன்னிக்கு கூப்பிட்டோம். அவர்களுடன் கதைத்து முடிய, தலைவர் சொன்னார், சம்பந்தன் ஐயாதான் இந்த குழுவிற்கு தலைவர் என.

இப்பொழுது சம்பந்தன் என்ன சொல்கிறார்? புலிகளிற்கும் எங்களிற்கும் சம்மந்தமில்லையென. புத்தி பேதலித்து விட்டது. வயது போய் ஓய்வெடுக்க வேண்டியவர். வாக்களிக்க சொல்வதற்கும் 2 பேர் பிடிக்க வேண்டும். இப்படியான தலைவர் நமக்கு தேவையா என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here