இரண்டு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த கிரண்… தண்டவாளத்தில் அழுது கொண்டிருந்த 1 வயது குழந்தை!

தனது 3 குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தாயொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 5,6 வயதுடைய குழந்தைகள் உயிரிழந்து விட, 1 வயதான குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியது. ரயில் தண்டவாளத்தில் தாய், 2 சகோதரிகளின் உடலுக்கு அருகில் அந்த குழந்தை அழுதபடி உட்கார்ந்திருக்கும் கலங்க வைக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

டெல்லியின் மண்டாவலி ரயில் நிலையம் அருகே ரிஷா தொழிலாளியாக இருப்பவர் ராகேஷ். இவரது மனைவி கிரண் (30). இந்த தம்பதிக்கு 5,6 வயதில் மகள்களும், 1 வயதில் மகனும் உள்ளனர்.

இவர்கள் அந்த ரயில்நிலையத்தின் அருகே உள்ள காலனியில் வசித்து வந்துள்ளனர்.

வியாழக்கிழமை அதிகாலை டெல்லியின் மண்டாவலி ரயில் நிலையத்தில் அந்த தாயும், 5,6 வயது மகள்களும் தற்கொலை செய்துகொண்டு, ரயில் தண்டவாளத்தில் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்கள். அருகில் ஒரு வயது சிறுவன் அழுது கொண்டிருந்தான்.

இதை கேள்விப்பட்ட போலீசார் விரைந்து வந்து அவரின் கணவர் ராகேஷினை விசாரித்தபோது, அவர் தன்னுடைய மனைவிக்கு மனநிலை பாதிப்பு இருந்ததாகவும், அதனால் அவருக்கு குழந்தைகளை பிடிக்காமல் வெறுத்து வந்ததாகவும், இதன் காரணமாக நேற்று இரவு குழந்தைகளை கூட்டி வந்து, முதலில் குழந்தைகளை ரயிலில் தள்ளிவிட்டு பிறகு கிரண் தற்கொலை செய்து கொண்டதாகவும், இதில் ஒரு வயது சிறுவன் தப்பித்ததாகவும் அவர் கூறினார்

போலீசார் இந்த தற்கொலை சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here