யாழில் ரெலோ வேட்பாளரின் அலப்பறை: பிரதேசசபை உறுப்பினர் கேட்ட சூடான கேள்வி!

யாழ் மாவட்ட வேட்பாளர் சுரேன்

உசைன் போல்ட், ஜஸ்ரின் கட்லின் போன்றவர்கள் கலந்து கொள்ளும் பந்தயமொன்றில், உள்ளூர் மட்டத்திலேயே கலந்து கொண்டிருக்காத ஒருவர் சென்று, அளப்பறை பண்ணினால் பார்ப்பவர்களிற்கு எப்படியிருக்கும்?

அப்படித்தான் யாழ்ப்பாண தேர்தல் களத்தில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்து வருகிறது.

பொதுவாகவே கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்ததும், ஒரு சுவாரஸ்ய அலசல் நடக்கும். யார் வெற்றி பெறுவார்கள் என்பது பற்றிய அலசல் பரவலாக நடக்கும். அதேயளவிற்கு இன்னொரு சுவாரஸ்ய அலசலும் நடக்கும். அது- யாரெல்லாம் கடைசி இடங்களிற்கு போட்டியிட போகிறார்கள் என.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டபோது, யார் கடைசி இடங்களிற்கு போட்டியிட போகும் வேட்பாளர்கள் என்ற அலசல் பரவலாக நடந்தது. அந்த எல்லா அலசல்களிலும் அடிபட்ட பெயர்- குருஸ்வாமி சுரேந்திரன்.

ரெலோவின் வேட்பாளர். மிகச்சரியாக சொன்னால், செல்வம் அடைக்கலநாதனின் வேட்பாளர். ரெலோவின் யாழ் மாவட்டகுழு சம்மதிக்காத நிலையில், செல்வம் அடைக்கலநாதனால் வேட்பாளராக நியமிக்கப்பட்டவர்.

மேடைக்கு மேடை ஒற்றுமை பற்றி பேசும் இந்த வகை வேட்பாளர்கள் நிஜத்தில் அப்படி நடப்பதில்லை. அதற்கு சுரேனும் சாட்சி.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேசசபை உறுப்பினர் ஒருவர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரச்சார கூட்டமொன்றை ஏற்பாடு செய்தமைக்கு சுரேன் மிரட்டல் விடுத்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

ரெலோ பிரதேசசபை உறுப்பினர் ஒருவர், தனது பிரதேசத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய பங்காளியின் பிரமுகர் கலந்து கொள்ளும் கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

அந்த பிரதேசசபை உறுப்பினரை தொலைபேசியில் அழைத்து, மிரட்டல் பாணியில், கட்சி மத்தியகுழுவின் மூலம் நடவடிக்கையெடுப்பேன்,ரெலோவின் கூட்டத்தை மட்டுமே நடத்த வேண்டுமென மிரட்டியுள்ளார்.

அந்த பிரதேசசபை உறுப்பினர் இலேசுப்பட்ட ஆள் அல்ல. சூடாகவே கேட்டிருக்கிறார். “நான் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள்தான் பிரச்சார கூட்டம் நடத்தினேன். நீங்கள் ஏற்கனவே இருந்து வந்த அரச ஆதரவு சிறிரெலோ ஆயுதக்குழுவிற்கு பிரச்சார கூட்டம் வைக்கவில்லை. நீங்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மற்ற கட்சி பிரமுகர்களின் பிரச்சார கூட்டங்களில் கலந்து கொள்ளும், அவர்கள் செல்லுமிடங்களிற்கு நீங்களும் சென்று புகைப்படங்கள் பதிவிடுகிறீர்கள். அதை நம்பியே நான் ஏற்பாடு செய்து விட்டேன். சுமந்திரனின் கூட்டத்திற்கு நீங்கள் செல்லலாம். ஆனால் சுமந்திரனிற்கு ரெலோ தரப்பில் கூட்டம் வைக்கக்கூடாது என்ற உங்கள் லொஜிக் நன்றாக இல்லையே“ என சூடாக பதில் வழங்கியுள்ளார்.

ஆக, விரைவில் ஏதாவதொரு புதிய காரணம் கண்டுபிடித்து ரெலோவின் பிரதேசசபை உறுப்பினருக்கு யாழில் கல்தா வழங்கப்படலாம். ஏற்கனவே யாழில் ரெலோவின் நிலை, ஆனந்தசங்கரியின் கட்சியின் நிலைமையை விட மோசமாக இருக்கிறது. இதற்குள் இப்படியும் வில்லங்கமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here