பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யூனிஸ் கான் என் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினார் என பாகிஸ்தானின் முன்னாள் துடுப்பாட்ட பயிற்சியாளர் கிராண்ட் பிளவர் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தானின் துடுப்பாட்ட பயிற்சியாளராக பணியாற்றிய சிம்பாவேயை சேர்ந்த கிராண்ட் பிளவர் தனது பயிற்சி அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:-
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூனிஸ் கானுக்கு ஒருமுறை சில ஆலோசனைகளை வழங்க முயன்றேன். அப்போது அவர் என் கழுத்தில் கத்தியை வைத்தார் என கூறி உள்ளார்.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக யூனுஸ்கான் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.