கண்ணிவெடி அகற்றும்போது வெடிவிபத்து: 3 பிள்ளைகளின் தாய் காயம்!

கிளிநொச்சி இயக்கச்சி நித்தியவெட்டை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த பெண் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (03) காலை 8.45 மணியளவில் இயக்கச்சி நித்தியவெட்டை பகுதியில் ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்தின் பணியாளர்கள் மனிதநேய கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த போது எதிர்பாரதவிதமாக வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன் போது கிளிநொச்சி இரத்தினபுரத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான 35 வயது மதிக்கதக்க பெண் ஒருவரே முகத்தில் காயமடைந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here