மேலும் 326 பேர் நாடு திரும்பினர்!

வெளிநாடுகளில் சிக்கியுள்ள 326 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

வியட்நாமில் சிக்கியிருந்த 65 பேர் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

யப்பானில் சிக்கியிருந்த 261 பேர் இன்று (3) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

யப்பானின் நரிட்டா விமான நிலையத்தில் இருந்து UL-455  இலக்க விமானத்தில் புறப்பட்ட இவர்கள் இன்று காலை 3.30 அளவில் நாட்டை வந்தடைந்தனர்.

அனைவரும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here