மஹேல இன்று முன்னிலையாக மாட்டார்!

2011 ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கெட் போட்டி சர்ச்சை தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக, மஹேல ஜயவர்தன விளையாட்டு அமைச்சின் விசேட விசாரணை பிரிவில் இன்று (3) முன்னிலையாக மாட்டார்.

2011 ஆம் ஆண்டு உலக கிண்ண போட்டித் தொடரின் இறுதி போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் ஆராயும் விசாரணைக்குழுவில் இன்று காலை 9 மணிக்கு முன்னிலையாகுமாறு மஹேலவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், அவர் இன்று முன்னிலையாக மாட்டார் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முன்னாள் அணித்தலைவர் குமார் சங்கக்கார நேற்று சுமார் 9 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here