நேற்று 12 பேருக்கு தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 12 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், 79 பேர் குணமடைந்துள்ளனர்.

கட்டாரிலிருந்து வந்த 05 பேர், இந்தியாவிலிருந்து வந்த கப்பல் பணியாளர் ஒருவர், தனிமைப்படுத்தப்பட்ட ஒருவர், குவைத்திலிருந்து வந்து திருகோணமலையில் தனிமைப்படுத்தப்பட்ட 05 பேர் ஆகிய 12 பேரே நேற்று அடையாளம் காணப்பட்டவர்களாவர்.

நேற்று இரவு 8.00 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக, அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,066 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,827 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் (01) பிரித்தானியாவிலிருந்து வந்த ஒருவர் (புனானை), பங்களாதேஷிலிருந்து வந்த 4 பேர் (பம்பைமடு 02), துபாயிலிருந்து வந்த ஒருவர், இந்தியாவிலிருந்து வந்த ஒருவர் ஆகிய 07 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று குணமடைந்தவர்களில் கடற்படையினர் 06 பேர் உள்ளடங்குகின்றனர்.

இதுவரை அடையாளம் காணப்பட்டவர்களில் கடற்படை மற்றும் அவர்களுடன் நெருக்கமான 947 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 904 கடற்படையினர் உள்ளடங்குகின்றனர். குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 848 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை வெளிநாட்டவர் 30 பேர் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து வந்த 793 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 2,066 பேரில் தற்போது 228 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 1,827 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 11 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 58 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here