நல்லை ஆதீனத்தை 3 மணித்தியாலம் காத்திருக்க வைத்த சஜித்!

யாழ்ப்பாணத்திற்கு தங்கியிருந்து சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சஜித் பிரேமதாச இன்று (2) மத தலைவர்களை சந்தித்தார்.

இன்று யாழில் பிரச்சாரக் கூட்டங்களை தொடங்குவதற்கு முன்னர் மத தலைவர்களை சந்தித்தார். அவரது முதலாவது சந்திப்பு, நல்லை ஆதீனத்தை சந்திப்பதாக திட்டம்.

காலை 7 மணிக்கு சந்திப்பு நடக்க திட்டமிடப்பட்டது. செய்தியாளர்களிற்கும் தகவல் அறிவிக்கப்பட்டது.

காலை 7 மணிக்கே செய்தியாளர்கள் அங்கு சென்றனர். நல்லை ஆதீனமும் 7 மணிக்கே தயாராகி, சஜித்திற்கு ஆசி வழங்க காத்திருந்தார். ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்கு சஜித் வரவில்லை.

3 மணித்தியாலம் காத்திருந்தார். அதன் பின்னரே சஜித் வந்தார்.

3 மணித்தியாலம் தாமதமாக வந்த சஜித், முக்கியமான ஏதோ அழைப்பு வந்திருக்க வேண்டும்- வாகனத்திற்குள் இருந்தபடி தொலைபேசியில் உரையாடினார். சுமார் 10 நிமிடத்திற்கு மேல், நல்லூர் பின் வீதியில் வாகனத்தில் உட்கார்ந்திருந்து தொலைபேசியில் உரையாடினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here