நல்லை ஆதீனத்திடம் ஆசி பெற்றார் சஜித்!

யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, நல்லை ஆதீனத்தை சந்தித்து ஆசி பெற்றார்.

இன்று (2) காலை நல்லை ஆதீனத்தில் இந்த சந்திப்பு நடந்தது.

வடக்கு கிழக்கில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி பணிகளை சுட்டிக்காட்டிய ஆதீனம், அனைத்து இன மக்களும் இனக்கப்பாட்டுடன் வாழ வேண்டும் என வலியுறுத்தினார்.

இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் உமாசந்திரா பிரகாஷ் மற்றும் இதர வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here