இடைநிறுத்தப்பட்ட வீண் செலவு வசதிகளை கோரி கடிதம் எழுதினார் ஆனோல்ட்!

மாநகரசபையினால் இடைநிறுத்தப்பட்ட அதிகரித்த ஆளணி வளத்தை மீள வழங்குமாறு கோரியுள்ளார் ஆடம்பர பிரியரான யாழ் மாநகரசபை வேட்பாளர் இ.ஆனோல்ட்.

யாழ் மாநகரசபை முதலமைச்சர் ஆனோல்ட்டின் தனிப்பட்ட ஆளணியினரான 6 உதவியாளர்களையும் மீள வழங்குமாறு வடக்கு ஆளுனர், வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் உள்ளிட்ட தரப்புக்களிற்கு, இ.ஆனோல்ட் கடிதமெழுதியுள்ளார்.

யாழ் மாவட்ட தேர்தலில் களமிறங்கியதை தொடர்ந்து ஆனோல்ட் முதல்வர் பதவியிலிருந்து விடுமுறை பெற்றிருந்தார். இதன்போது அவரது 3 உதவியாளர்களும் விடுமுறை பெற்றிருந்தனர்.

எனினும், எஞ்சிய 3 உதவியாளர்களும் அலுவலகம் வராமலே சம்பளம் பெற்று வந்தனர். பாரதூரமான இந்த விவகாரத்தை ஆலோசித்த யாழ் மாநகரசபை, அந்த ஆளணியை நீக்கியிருந்தது.

தனது ஆளணியை நீங்கள் எப்படி நீக்கலாமென சக உறுப்பனர்களுடன் மல்லுக்கட்டிய ஆனோல்ட், அந்த வழங்களை மீள வழங்கக்கோரி கடிதம் எழுதியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here