நீதிமன்ற கட்டளையை வாங்க மறுத்து, தப்பியோடிய யாழ் பூசகர் விபத்தில் சிக்கினார்!

நீதிமன்ற கட்டளையை வாங்க மறுத்து, மோட்டார் சைக்கிளில் ஓட்டம் காட்டிய பூசகர் ஒருவர் விபத்தில் சிக்கிய சுவாரஸ்யம் நடந்துள்ளது.

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இது குறித்து பல்வேறு தகவல்கள் வௌயாகியுள்ள நிலையில், புன்னாலைக்கட்டுவன்  தெற்கு சணேச சனசமூக நிலையத்தினரால் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில்,

கடந்த 23ஆம் திகதி புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவமானது கொலை முயற்சி என செய்திகள் வெளியாகியிருந்தது. இதில் எந்த உண்மையுமில்லை. கடந்த 23ஆம் திகதி மேல் நீதிமன்றத்தால் புன்னாலைக்கட்டுவன் ஆயக்கடவை சித்திவிநாயகர் ஆலய பூசகருக்கு எதிராக நீதிமன்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இக்கட்டளை கையளிப்பதற்காக நீதிமன்ற பிஸ்கால் அவர் வீட்டுக்கு சென்ற வேளை அந்த கட்டளையை வாங்க மறுத்த குறித்த ஆதீனகர்த்தா தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் தப்பி ஓட முயற்சித்துள்ளார்.

இதனை அவதானித்த பிஸ்கால், அவரின் பின்னால் சென்றுள்ளர். புன்னாலைக்கட்டுவனில் உள்ள வாகன சுத்திகரிப்பு நிலையத்திற்கு அண்மையில், பூசகர் தனக்கு முன்னால் சென்ற வாகனத்தை முந்திச்செல்ல முற்பட்டபோது பின்னால் சென்ற பிஸ்காலின் மோட்டார் சைக்கிளுடன் மோதி, இருவரும் விபத்திற்குள்ளானார்கள்.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் பிஸ்கால் முறையிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here