பொலிஸ்- போதைப்பொருள் தொடர்பை ஆராய 3 குழுக்கள் விசாரணை!

பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் அதிகாரிகளுக்கும், போதைப்பொருள் வியாபாரிகளுக்கு இடையிலான தொடர்புகளை விசாரிக்க மூன்று குழுக்களை சி.ஐ.டி நியமித்துள்ளது. இந்த விசாரணையில் சுமார் 25 சிஐடி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய டி.ஐ.ஜி.அஜித் ரோஹான, “பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் நான்கு அதிகாரிகள் குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தவுடன், உடனடியாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அவர்களில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் (எஸ்ஐ), இரண்டு போலீஸ் சார்ஜென்ட்கள் மற்றும் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் (பிசி) ஆகியோர் உள்ளனர். அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறார்கள்.

கைது செய்யப்பட்டவர்கள் மறைமுகமாக இந்த போதைப்பொருள் மோசடியுடன் தொடர்புபட்டுள்ளனர் என்ற தகவலை சிஐடி விசாரணைகள் கண்டுபிடித்துள்ளன என்றும் அவர் கூறினார்.

11.2 மில்லியன் மற்றும் சுமார் 20 பவுண் தங்க நகைகளும் காவலில் வைக்கப்பட்டுள்ளன.

இவை தற்காலிகமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அது நிரந்தரமாக கையகப்படுத்தப்படும் என்றும் கூறினார்.

சந்தேக நபர்களுடன் தொடர்புடைய மூன்று வங்கி கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இந்த குற்றச்செயலுடன் தொடர்புடைய இன்னொரு பொலிஸ் அதிகாரி தலைமறைவாக உள்ளார். அவர் நாட்டை விட்டு வெளியேற தடை வதிக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து பொலிஸ் நிலையங்களிற்கும் அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here