டக்ளஸ் போன்ற சிறந்தவர்களை தெரிவு செய்யுங்கள்!

வடபகுதி மக்கள் தமக்கு நிரந்தரமான அரசியல் தீர்வை காணவும், தமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்யவும் கூடிய தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போன்ற மக்கள் சேவை செய்யும் தலைவர்களை உங்கள் முதல் தெரிவாக தெரிவு செய்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பி அவரை பலப்படுத்த வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தமிழ் ஊடகவியலாளர்களை நேற்று அலரி மாளிகையில் சந்தித்து பேசியபோது அதனை தெரிவித்தார்.

வெறுமனே நாடாளுமன்ற ஆசனங்களை நிரப்பிக் கொண்டு, தேவையற்ற விடயங்களை பேசிக்கொண்டு, நாட்டின் உயர்சபையான நாடாளுமன்றத்தில் கூக்குரல் இடுவதால் எந்தவித பிரயோசனமும் ஏற்பட போவதில்லை.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போல, அவரது கட்சியில் பலர் போட்டியிடுகின்றனர். அதேபோன்று சிறிலங்கா சுதந்திரக்கட்சி, அரசசார்பு கொள்கையுடைய கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

அவர்களை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்து அனுப்பி, வடக்கு மக்கள் தமது பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here