பிரித்தானியாவில் தாயாரால் கொல்லப்பட்ட சிறுமி: நடந்தது என்ன?

பிரித்தானியாவில் முல்லைத்தீவு நெடுக்கேணி பகுதியைச் சேர்ந்த பெண் தனது மகளைக் குத்திக் கொலை செய்த சம்பவம் ! நடந்தது என்ன ?

லண்டனில் இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது நான்கு வயது மகளை கொலை செய்துள்ளதுடன், தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மன அழுத்தம் காரணமாகவே இவ்வாறு தனது மகளை கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவசர சிகிச்சை உலங்குவானூர்தி மூலம் தாயும், மகளும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், மகள் உயிரிழந்துள்ளதாகவும், தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

லண்டன் மிச்சத்தில் நடந்த கத்திக்கு சம்பவத்தில், 35 வயது தாயார் ஒருவர் தனது 5 வயது மகளான சாயகியை குத்திக் கொலை செய்துள்ள நிலையில். தன்னையும் அவர் பலமாக கத்தியால் குத்தியுள்ளார் . இதனால் நேற்றைய தினம் 5 மணி நேர ஆப்பரேஷன் ஒன்று அவருக்கு செய்யப்பட்டுள்ள போதும் அவர் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை நாளை(2) மேலும் ஒரு சத்திர சிகிச்சை ஒன்றை மேற்கொண்டால் மாத்திரமே, அவர் பிழைப்பாரா இல்லையா என்பதனை உறுதியாக சொல்ல முடியும் என வைத்தியர்கள் கூறியுள்ளதாகவும் கூறப்படுள்ளது.

இந்த நிலையில் சாயகியின் தாயார் நீண்ட நாட்களாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர் என்றும் , அவரது வியாதியை எவருமே குணப்படுத்தவும் இல்லை என்றும் கூறப்படுகின்றது.

இதேவேளை சாயகியின் தமிழ் பாடசாலை ஆசியர் ஒருவர் தெரிவிக்கையில், குறித்த அம்மா தமிழ் பாடசாலைக்கு சாயகியை கூட்டி வருவார் என்றும். ஆனால் தனக்கு தானே ஏதோ பேசிக் கொண்டு இருப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here