யாழிலிருந்து மரக்கறி ஏற்றிச்சென்ற கூலர் வாகனம்… பரிசோதித்த பொலிசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

வ்வுனியாவில் 201கிலோ கேரள கஞ்சாவினை கடத்திச் சென்ற ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பறயனாலங்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

யாழில் இருந்து மன்னார் உயிலங்குளம் ஊடாக மரக்கறிகளை ஏற்றிச் சென்ற கூலர் ரக வாகனத்தை இன்றயதினம் காலை 7 மணியளவில் வவுனியா பறயனாலங்குளம் சந்தியில் அமைந்துள்ள சோதனை சாவடியில் வழிமறித்த பொலிசார் அதில் சோதனைகளை மேற்கொண்டனர்.

இதன் போது குறித்த வாகனத்தில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 201கிலோ கேரள கஞ்சாவினை மீட்டதுடன், வாகனத்தையும், அதன் சாரதியையும் கைதுசெய்து பொலிஸ்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

சம்பவத்தில் வாகனத்தின் சாரதியான யாழ் பருத்திதுறை பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மீட்கபட்ட கஞ்சாவின் பெறுமதி இரண்டு கோடியே 40 இலட்சம் ரூபாய் என பொலிசார் தெரிவித்ததுடன் கைதுசெய்யப்பட்டவரை மேலதிக விசாரணைகளின் பின்னர் நாளையதினம் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக மேலும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here