யாழில் சஜித் பிரச்சாரக் கூட்டங்களில்!

மூன்று நாட்கள் தேர்தல் பரப்புரைக்காக வடக்குக்கு வந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், பிரதமர் வேட்பாளருமான சஜித் பிரேமதாசா இன்று புதன்கிழமை வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரி, யாழ்ப்பாணம் நீராவியடி இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி, கோப்பாய் செல்வமஹால் மண்டபம் ஆகிய இடங்களில் பிரச்சார கூட்டங்களை நடத்தினார்.

இந்த பரப்புரை கூட்டத்தில் யாழ் கிளிநொச்சி தேர்தல் தொகுதிக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் உமாச்சந்திர பிரகாஷ், கிருபாகரன், அகிலதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here