பிரபல சிறுவர் இலக்கிய ஆசிரியர் சிபில் வெத்தசிங்க காலமானார்!

புகழ்பெற்ற சிறுவர் இலக்கிய எழுத்தாளர் சிபில் வெத்தசிங்க காலமானார்.

அவர் நேற்று இரவு ஸ்ரீ ஜெயவர்த்தனபுரா வைத்தியசாலையில் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில், தனது 92 வயதில் காலமானார்.

சிபில் வெத்தசிங்க 1928 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் திகதி பிறந்தார்.

கலாகீர்த்தி சிபில் வெத்தசிங்க சிறுவர்கள் கதை எழுத்தாளர் மற்றும் இலங்கையில் எடுத்துக்காட்டுக்கு படங்கள் வரைபவர் (illustrator) ஆவார்.

அவர் எழுதிய புத்தகங்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. வெத்தசிங்க 200 க்கும் மேற்பட்ட சிறுவர் புத்தகங்களை எழுதியுள்ளார்.

அவரது முதல் புத்தகம் ‘குடா ஹோரா’ பல சர்வதேச விருதுகளைப் பெற்றது, இறுதியில் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது.

சிபில் வெத்தசிங்க தொழில் வாழ்க்கையில், அவர் எழுதிய குழந்தைகளின் கதைகள் ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் விருதுகளைப் பெற்றதன் மூலம் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றார்.

அதிக எண்ணிக்கையிலான மாற்று முடிவுகளைக் கொண்ட ஒரு புத்தகத்திற்கு கின்னஸ் உலக சாதனையையும் அவர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here