கருணா, விக்னேஸ்வரன் மீது உடன் நடவடிக்கை: கொக்கரிக்கிறார் கோட்டாவின் கூட்டாளி!

என்னைபபொறுத்தவரை கருணாவும், சி.வி.விக்னேஸ்வரனும் ஒன்றுதான். இனவாத கருத்துக்களை பரப்பி, தமிழ் இளைஞர்களை திசைதிருப்ப முயலும் இவர்கள் இருவருக்கும் எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் எம்.பி, ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இதுவரை கருணாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்த அவர், தற்போது பல்டியடித்து புதிய கருத்தை கூறியுள்ளார்.

நேற்று (30) கொழும்பில் செய்தியாளர்கள் மத்தியில் பேசியபோது இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தத்திற்கு எதிராக போராடி, நாட்டை வெற்றி கொண்டவர்தான் தற்போது ஜனாதிபதியாக உள்ளார். நாட்டை பிளவுபடுத்துவதற்கு எதிராகத்தான் நாம் அன்று போராடினோம். எனவே இனியும் நாட்டில் சமஷ்டிக்க இடமில்லையென்பதில் உறுதியாக இருக்கின்றோம்.

என்னைப் பொறுத்தவரை வடக்கின் முன்னாள் அமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும், முன்னாள் பிரதியமைச்சர் கருணாவும் ஒன்றுதான்.

கருணா அண்மையில் தெரிவித்த கருத்து தொடர்பாக நிச்சயமாக விசாரணை நடத்தியே ஆக வேண்டும். அரசியல்ரீதியாக அவரது கருத்தை முற்றாக நிராகரிக்கிறோம்.

அதேபோல, விக்னேஸ்வரனும் கடுமையான இனவாதியாக காணப்படுகிறார். கொழும்பில் பிறந்து, சிங்கள மக்களுடன் வாழ்ந்து, நீதியரசராக இங்கு கடமையாற்றி, இப்பொழுது வடக்கிற்கு சென்று, சிங்கள மக்களுடன் வாழ முடியாதென்கிறார். தமிழ் இளைஞர்கள் மத்தியில், சிங்களவர் தொடர்பான வெறுப்பையே அவர் விதைத்துள்ளார்.

இவரது செயற்பாடு தொடர்பில் சட்டநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நாம் புலிகளின் உறுப்பினர்களை கொன்றோம் எனக்கூறி வாக்கு கேட்கவில்லை. நாம் போரிட்டது பயங்கரவாதத்திற்கு எதிராக. நாம் அன்று போரிட்டு யுத்தத்தை வெற்றி கொண்டதன் காரணத்தினால்தான், இன்று அனைவரும் நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்கள் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here