தலைவன் இல்லையென்று அச்சப்பட வேண்டாம்… தமிழனத்தின் சொந்தக்காரி அனந்தி அம்மா வாராடா: அலப்பறையின் உச்சம்!

ஒவ்வொரு வேட்பாளர்களும் செய்யும் அளப்பறைகளை பார்க்கும்போது, இந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழர்கள் என்னென்ன விசித்திரங்களையெல்லாம் காணப் போகிறார்களோ என்ற பீதிதான் எழுந்துள்ளது.

அந்த வகையில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் அனந்தி சசிதரன், தனக்கான பிரச்சார பாடல் ஒன்றை வெளியிட்டு, பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அலப்பறையின் உச்சமாக அமைந்துள்ள அந்த பாடலில், வெள்ளை நிற மேலங்கி அணிந்தபடி சில இளைஞர்களும், யுவதிகளும் மோட்டார் சைக்கிள், வாகன பவனி செல்ல பாடல் ஒலிக்கிறது.

அந்த பாடல் வரிகள்-

பாயும் புலிய நேரடியா வந்து பாரு
ஈழத்தை ஆழ வந்த எங்கள் தலைவி அம்மா பாரு
சட்டத்தை எப்போதும் சாம போல பார்ப்பாங்க
யாருக்கும் அடிமையில்லை திமிரா நின்று சொல்லுவா
யாரைப்பார்த்தும் அரசியலுக்கு வந்ததில்லடா
தமிழ் இனத்திற்காக வாழ வந்த தங்கத் தலைவிடா

எதிரிய பார்த்து பயந்ததில்லடா
எமனே வந்தாலும் எதிர்க்கும் தில்லடா
தமிழன் என்று நிமிர்ந்து நில்லடா
தமிழினத்தின் தலைவி அனந்தி அம்மா வாராடா
தலைவன் இல்லையென்று நீ அச்சப்பட வேண்டாம்
தமிழனத்தின் சொந்தக்காரி அனந்தி அம்மா வாராடா

பழகிப் பாரடா பாசம் தெரியும்டா
எதிர்த்து பாரடா எரிமலை வெடிக்கும்டா
சிங்கம் போல திமிரா இருப்பாடா
பாயும் புலி போல பகைவனை வீழ்த்துவா
இரத்த வெள்ளம் கண்டுகூட எதிரிப்பக்கம் ஓடேல்ல
தமிழினத்தை வாழவைக்க அரசியலுக்கு வந்தாடா
தமிழினத்தின் பிரச்சனையை ஐ.நா சபையில் தட்டிக் கேட்பா
தமிழர்களிற்கோர் தலைவி அனந்தி அம்மாடா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here