அரச, தனியார் அலுவலகங்களின் புதிய நேர அட்டவணை பரிந்துரை!

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் சமூக இடைவெளியை பராமரித்தல், போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பது மற்றும் பொது மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகளின் செயல்திறனை மேம்படுத்துதல் ஆகிய நோக்கத்துடன் தனியார் மற்றும் அரச அலுவலகங்களின் ஆரம்ப மற்றும் நிறைவு நேரங்களில் மாற்றம் செய்யவது தொடர்பான பரிந்துரைகளை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அரச அலுவலகங்கள் காலை 09.00 மணி முதல் மாலை 4.45 மணி வரையிலும், தனியார் துறை அலுவலகங்கள் காலை 09.45 மணி முதல் மாலை 06.45 மணி வரையிலும் இயங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அலுவலக நேரங்களில் மாற்றம் செய்வது குறித்து ஜனாதிபதியின் உத்தரவின் பேரில், நியமிக்கப்பட்ட குழுவினால் இந்த பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தனியார் மற்றும் பொதுத்துறை அலுவலகங்களின் ஆரம்ப மற்றும் முடிவு நேரம் குறித்த திருத்த பரிந்துரை அறிக்கை அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் காமினி செனவிரத்னவினால் இன்று காலை ஒப்படைக்கப்பட்டது.

பரிந்துரைகள் பொது நிர்வாக அமைச்சு மற்றும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here