கொரோனா முடியவில்லை… முடிவின் அருகில் கூட செல்லவில்லை; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் முற்றுப்பெறவில்லை. பரவல் முடிவதற்கான அருகில் கூட நெருங்கவில்லை என்று உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறும்போது, “கொரோனா வைரஸால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். வைரஸ் இன்னும் நிறைய இடங்களில் பரவும். நாம் தற்போது இந்த வைரஸ் முடிவு பெற வேண்டும் என்று நினைக்கிறோம். நாம் அனைவரும் வாழ்க்கையைத் தொடங்க நினைக்கிறோம். ஆனால், நிதர்சனம் என்னவென்றால் கொரோனா வைரஸ் பரவல் முடிவதற்கான அருகில் கூட நெருங்கவில்லை. கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது” என்று தெரிவித்தார்.

மேலும், கொரோனா வைரஸை அழிப்பது தொடர்பாகக் கண்டறியப்பட்டுள்ள ஆராய்ச்சிகளைப் பற்றி மதிப்பீடு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் இந்த வாரம் நடைபெறவுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்

இந்தச் சூழலில் டெக்ஸாமெதாசோன் ஸ்டெராய்ட் மாத்திரைகள் சுவாசக் கருவி உதவியுடன் இருக்கும் நோயாளிகளில் 35% பேரையும், கூடுதல் பிராணவாயு தேவைப்படும் கொரோனா நோயாளிகளில் 20% பேரையும் மரணத்திலிருந்து தடுத்துள்ளதாக இங்கிலாந்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கூறினர். இதையத்து அம்மாத்திரைகளின் உற்பத்தி அதிகரிக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here