கொரோனாவை தொடர்ந்து சீனாவில் உருவானது அடுத்து பேராபத்து வைரஸ்: இதற்கு மனிதர்களிடம் நோயெதிர்ப்பு சக்தி இல்லை!


சீனாவில் பன்றிகளிடையே பரவும் புதுவித காய்ச்சல் எந்த நேரத்திலும் மனிதர்களைத் தாக்கலாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

சீனா உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரசால் 1 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 5 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் திணறி வரும் நிலையில் கொரோனா வைரஸ் போல பெருந்தொற்றாக வாய்ப்புள்ள காய்ச்சல் ஒன்று சீனாவில் பன்றிகளிடையே தற்போது பரவி வருகிறது.

ஆனால், எந்த நேரத்திலும் இது மனிதர்களைத் தாக்கலாம் என்ற ஆபத்து இருந்து வருகிறது.

இப்போது இது உடனடியான பிரச்சினை இல்லை என்றாலும், பின் வரும் காலங்களில் எப்போது வேண்டுமானாலும் இது மனிதர்களிடையே பரவும் வாய்ப்புண்டு.

இக்காய்ச்சல் கொரோனா வைரஸ் தொற்று போல உலகப் பெருந்தொற்றாக மாறும் அச்சுறுத்தல் உள்ளது என ஆய்வாளர்கள் கவலை கொண்டுள்ளனர்.

இது புதுவிதமான வைரஸ் என்பதால் மனிதர்களுக்கு இதனை எதிர்கொள்ள நோயெதிர்ப்புத் திறன் இருக்காது. இப்போது வரை இதனால் பேராபத்து ஏதும் இல்லை. ஆனால், இதனை நாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்கிறார் இது குறித்து தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வரும் பேராசிரியர் கிம் சவு சாங். இந்த வைரஸை ஜி4 இஏ எச்1என்1 என ஆராய்ச்சியாளர்கள் அழைக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here