சீனாவில் மீண்டும் கொரோனா: முழுமையாக முடங்கியது தலைநகர்!


சீனாவில் கொரோனா தொற்று மீண்டும் தலைதூக்கியதையடுத்து, தலைநகர் பெய்ஜிங் முழுவதும் முழு ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதையும் இன்று அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் வூஹான் நகரில்தான் முதன்முதலாக பரவியது.

கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளைமேற்கொண்டதன் விளைவாக, சீனாவில் இந்த நோய் தொற்று கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் முழுவதுமாக கட்டுக்குள் வந்தது. அங்கு இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சீனத் தலைநகர் பெய்ஜிங் அருகே உள்ள அக்சின் என்ற பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அங்குள்ள ஒரு இறைச்சி சந்தையில் பணிபுரிவோரிடம் இருந்து இந்த வைரஸ் பரவியிருக்கக் கூடும் எனசந்தேகிக்கப்படுகிறது. இதுவரைஅந்தப் பகுதியில் சுமார் 311 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெய்ஜிங் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள பாடசாலை, கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், கடைகள், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. ஒரு வீட்டில் இருந்து நாளொன்றுக்கு ஒருவர், ஒரு முறை மட்டுமே வெளியே வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here