சட்டம் குடும்பத்திற்கு இல்லையா?

முகக்கவசம் அணியா விட்டால் கட்டாய தனிமைப்படுத்தலுக்குள்ளாகுவார்கள் என பொலிசார் அறிவித்திருந்த நிலையில், நாமல் ராஜபக்சவின் அரசியல் பிரச்சார கூட்டத்தில் இது எதுவும் கணக்கிலெடுக்கப்படவில்லையென்பதை காண்பிக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

நேற்று (29) இந்த புகைப்படத்தை நாமல் தனது ருவிற்றர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

வீடமைப்பு அதிகாரசபையின் உத்தியோகத்தர்களிற்கு அரசியல் பிரச்சார கூட்டம் இடம்பெற்றுள்ளது. நேற்று இதனை நாமல் பதிவிட்டார். கடந்த 28ஆம் திகதி முதல், முகக்கவசம் அணியாவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாவார்கள் என பொலிசார் அறிவித்திருந்தனர்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் சட்டங்கள் என குறிப்பிட்டு, கடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளிலும் பொலிசார் தலையீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here