அடிமைச்சின்னத்தை பேணிய கடைசி மாநிலமும் கைவிடுகிறது!


அமெரிக்காவின் மிசிசிப்பி மாநில கொடியிலுள்ள கூட்டமைப்பு சின்னத்தை அகற்ற அந்த மாநில எம்.பிக்கள் தீர்மானித்துள்ளனர். இது தொடர்பான பிரேரணை சட்டமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது, 91- 23 என்ற வாக்கினடிப்படையில் வெற்றிபெற்றது.

வெள்ளை நிறத்திலான 13 நட்சத்திர குறியீடுகளை கொண்ட சின்னத்தை அமெரிக்காவின் பிற மாநிலங்கள் கைவிட்டு விட்டன.

1861-65 வரையான சிவில் யுத்தத்தில் தோல்வியடைந்த அடிமைகளை கொண்ட மாநிலங்கள் இந்த சின்னத்தை பயன்படுத்தின. யுத்த வெற்றியை பிரதிபலிப்பதாக இந்த சின்னம் அமைந்திருந்தது.

ஆனால் காலப்போக்கில் ஏனைய மாநிலங்கள் இந்த சின்னத்தை துறந்தன. இறுதிவரை அடிமைச்சின்னத்தை தனது கொடியில், மிசிசிப்பி பேணியது.

அந்த மாநிலத்தில் 38 வீதமானவர்கள் கருப்பர்கள்.

இந்த நிலையில் ஜோர்ஜ் ஃபிளொயிட் கொலையை தொடர்ந்த எழுந்த நிறவெறிக்கு எதிரான அலையில், 126 வரலாற்றை கொண்ட அடிமைச்சின்னத்திற்கு எதிராக எம்.பிக்கள் வாக்களித்துள்ளனர்.

சட்டமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தால் அதை சட்டமாக்க கையொப்பிட தயாராக உள்ளதாக அந்த மாநில ஆளுனர் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here