ஹெரோயினுடன் இளைஞன் கைது!

வவுனியாவில் இன்று (29) இடம்பெற்ற நடவடிக்கையின் போது இளைஞன் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கும்போது,
இன்று பிற்பகல் வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சிலர் போதைப் பொருட்களுடன் நடமாட்டம் காணப்படுவதாக வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்த தலைமையில் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப்பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் அங்கு சென்ற போதை ஒழிப்பிரிவினர்  சிறீராமபுரம் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய இளைஞனை கைது செய்துள்ளனர்.
அவரிடமிருந்து 170 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட இளைஞனிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் விசாரணைகளின் பின்னர்  நாளைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here