விக்னேஸ்வரன் அணி வேட்பாளரின் சாரதி மீது தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதேசசபை உறுப்பினர் தாக்குதல்; கைத்தொலைபேசி திருட்டு: நட்டஈடு செலுத்தினார் வேட்பாளர்!

தமிழ் மக்கள் கூட்டணியின் மட்டக்களப்பு வேட்பாளர் கணேசமூர்த்தி கோபிநாத்தின் சாரதி மீது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

அவர் தாக்குதல் நடத்திய களேபரம் முடிந்த பின்னரே, தன்னுடைய கைத்தொலைபேசி காணாமல் போயிருந்ததை தாக்குதலுக்குள்ளானவர் அவதானித்தார். பின்னர், இதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் நட்டஈடு வழங்கி, வழக்கை சமரசம் செய்தார்.

வேட்பாளரின் சாரதி முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது இடைமறித்த பிரதேசபை உறுப்பினர் தலைமையிலான குழுவொன்று அவர்மீது சராமாரியான தாக்குதல் நடத்தியுள்ளது.

சம்பவத்தில் காயமடைத்த சாரதி களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவத்தில் அவரின் கைடக்க தொலைபோசியும் களவாடப்பட்டுள்ளது.

குறித்த சம்வத்தை கேள்வியுற்ற தமிழ் மக்கள் கூட்டணி வேட்பாளர்களான முன்னாள் அமைச்சர் கணேசமூர்த்தி மற்றும் அவரது மகன் கோபிநாத் ஆகியோர் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையம் வந்து சம்பவம் தொடர்பில் முறையிட்டதனையடுத்து, பிரதேச சபை உறுப்பினர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர்.

இதனை கேள்வியுற்ற இவது சகாவான தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வேட்பாளர் சாணக்கிய ராகுல் வீரபுத்திரன், கணேசமூர்த்தியிடம் முறையில் மன்னிப்பு கேட்டதனையடுத்து வழக்கு சாமதானமாக்கப்பட்டது. அத்துடன், தாக்குதல் நடத்தியவர்களால் களவாடப்பட்டதென கருதப்படும் தொலைபேசிக்காக சாணக்கியனால் 85 ஆயிரம் ரூபாய் நட்டஈடும் பொலிஸ் நிலையத்தில் வைத்து செலுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here