யாழ் போதனா வைத்தியசாலை பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா!


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பூவரசங்குளம் தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இன்று 86 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.

பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:

* போதனா வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் – 4 பேர்.

* ஆதாரவைத்தியசாலை ஊர்காவற்துறை – ஒருவர்.

* தனிமைப்படுத்தல் மையம் பம்பைமடு – 6 பேர்.

* பொது வைத்தியசாலை முல்லைத்தீவு – 5 பேர்.

* ஆதாரவைத்தியசாலை தெல்லிப்பளை – ஒருவர்.

* கடற்படை வைத்தியசாலை காங்கேசன்துறை – ஒருவர்.

* தனிமைப்படுத்தல் மையம் இரணைமடு – 3 பேர்.

* தனிமைப்படுத்தல் மையம் விடத்தல்பளை – 19 பேர் .

* தனிமைப்படுத்தல் மையம் பூவரசங்குளம் – 46 பேர். (ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here