சிறையிலுள்ள பாதாள உலகக்குழு தலைவனிற்கு சொந்தமான துப்பாக்கிகளே மீட்பு!

ஹோமாகம, பிட்டிபன பகுதியில் இன்று மீட்கப்பட்ட 12 துப்பாக்கிகள், பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக்குழு தலைவன் கொஸ்கொட தாரவிற்கு சொந்தமானது என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

பாதாள உலகக்குழு ஒன்றிடமிருந்து அதிகளவான துப்பாக்கி மீட்கப்பட்ட சந்தர்ப்பம் இதுவாகும்.

ரி 56 ரக துப்பாக்கிகள் 11, ரி 81 ரக துப்பாக்கி 1 என்பன மீட்கப்பட்டிருந்தன.

நான்கு மாடி வர்த்தக நிலையமொன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் இவை மீட்கப்பட்டன.

அண்மையில் மீகொட, இன்கம்மாருவ பகுதியில் கைதான பொட்ட கபில என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் துப்பாக்கிகள் பற்றிய தகவல் வெளியானது.

மாத்தறையில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்திலும் இவருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது.

மயானம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டு, பின்னர் வர்த்தக நிலையத்திற்கு துப்பாக்கிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக நிலையத்திற்கு சொ்தமான லொறிகள் நாட்டின் பல பகுதிகளிற்கும் கொண்டு செல்லப்படுகின்றன.அவற்றின் மூலம் துப்பாக்கிகள் கடத்தப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.

வர்த்தக நிலைய உரிமையாளர், அவரது மனைவி மற்றும் எட்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மேலதிக விசாரணைக்காக குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here