UPDATE: செல்பி எடுத்தபோது காதல் ஜோடி தவறி நீர்வீழ்ச்சிக்குள் விழுந்தனர்: காதலன் மரணம்?

லக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரிவ்ஸ்டன் செர்ரா நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த காதல் ஜோடி, செல்பி எடுக்கும்போதே இந்த அனர்த்தத்தை சந்தித்துள்ளனர்.

அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள இந்த காதல் ஜோடி, திருமணத்தின் முன்னதாக படப்பிடிப்பு ஒன்றிற்காக, குருணாகலில் இருந்து செர்ரா நீர்வீழ்ச்சி பகுதிக்கு தமது பெற்றோர்களுடன் வந்துள்ளனர்.

நேற்று (28) மாலை இந்த சம்பவம் நடந்தது.

படப்பிடிப்பின் போது, காதல் ஜோடி நீர்த்தேக்கத்தில் செல்பி எடுத்தபோது, இருவரும் தவறி நீர்வீழ்ச்சிக்குள் விழுந்தனர். அந்த பகுதியில் இருந்தவர்களால் யுவதி மீட்கப்பட்டார்.

காதலன் ஆழமான பகுதிக்குள் விழுந்ததால் மீட்க முடியாமல் போனது. அவர் நீரில் மூழ்கி காணாமல் போய் விட்டார்.

குருணாகல், பன்சியகமவை சேர்ந்த எஸ்.கே.சிராந்த சஞ்சய ரத்னசூரிய (27) என்பவரே காணாமல் போயுள்ளார்.

கடற்படை சுழியோடிகள் அவரது உடலை தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here