கிணறு ஆழப்படுத்த இறங்கிய ஒருவர் பலி… ஒருவர் ஆபத்தான நிலையில்!


புதுக்குடியிருப்பில் கிணறு ஆழப்படுத்த இறங்கிய ஒருவர் உயிரிழந்ததுடன், ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (29) காலை இந்த சம்பவம் நடந்தது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட நேசன் குடியிருப்பு 1ஆம் வட்டாரத்தில் கடும் வறட்சி காரணமாக மக்களின் கிணறுகளில் நீர் வற்றி காணப்படுகின்றது. குறித்த பகுதியில் உள்ள வீட்டு கிணறு ஒன்றினை ஆழப்படுத்துவதற்காக இன்று காலை கிணற்றுக்குள் இறங்கிய இருவர் அமுக்கம் அமுக்கி மயங்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது புதுக்குடியிருப்பு 1 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த செ.திலகச்செல்வன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்த நிலையில் புதுக்குடியிருப்பு மருத்துவுமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆ.றதுர்யன் (24) என்ற இளைஞன் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடும் வறட்சி காரணமாக நேசன் குடியிருப்பு பகுதி மக்களின் கிணறுகள் வற்றி காணப்படுகின்றன. இதனால் கிணறுகளை மேலும் ஆழப்படுத்தும் நடவடிக்கையில் மக்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

இதன்போது கிணற்றில் இறங்கியவர்கள் மயக்கம் அடைந்த நிலையில் அருகில் உள்ளவர்களின் உதவியுடன் கிணற்றிற்குள் வேப்பம் இலைகள் கட்டி இறக்கப்பட்டு ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுளது மற்றையவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here