கிழக்கிலும் பாடசாலைகள் ஆரம்பித்தன!

3 மாதத்தின் பின்னர் பாடசாலைகள் யாவும் இன்று காலை (29) திறக்கப்பட்டன.

பாடசாலைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து அதிபர் ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்விசார பாடசாலை உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் ஆர்வத்துடன் பாடசாலைக்கு சமூகமளித்திருந்தனர்.

பாடசாலையின் உயர்தர மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் 06ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் நிருவாக செயற்பாடுகள் யாவும் இன்று இடம்பெற்றன.

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்ட நாள் முதல் சகல பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டன. இதன் காரணமாக மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் யாவும் இடைநிறுத்தப்பட்ட நிலையில் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் அரசாங்கத்தினது பெருமுயற்சியின் காரணமாக கொரோனா கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்ட நிலையில் பாடசாலைகளை திறப்பதற்கான அனுமதியை சுகாதார அமைச்சும் சுகாதார பிரிவினரும் வழங்கினர்.

கல்குடா

அம்பாறை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here