திருமணத்தின் முன் புகைப்படம் எடுக்க வந்த காதல் ஜோடி நீர்வீழ்ச்சிக்குள் விழுந்தனர்: காதலன் மாயம்!


லக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நக்கிள்ஸ் பகுதியில் புகைப்படம் எடுத்த காதல் ஜோடி நீர்வீழ்ச்சியில் விழுந்துள்ளனர். இதில் யுவதி மீட்கப்பட்டுள்ளார். காதலன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

குருநாகல் பகுதியை சேர்ந்த காதல் ஜோடியொன்றே அனர்த்தத்தில் சிக்கியுள்ளது.

அடுத்த மாதம் இந்த ஜோடி திருமணம் செய்யவிருந்தனர். புகைப்படம் எடுப்பதற்காக தமது பெற்றோருடன் அவர்கள் புகைப்படம் எடுக்க வந்திருந்தனர்.

இதன்போது ஜோடி தவறி நீரில் விழுந்துள்ளனர். யுவதியை அந்தப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டனர். காதலன் ஆழமான பகுதியில் விழுந்து காணாமல் போயுள்ளார்.

காணாமல் போன இளைஞனை கண்டுபிடிக்க கடற்படை நீச்சல் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக லக்கல பொலிசார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here