மலையக பகுதிகளிலும் பாடசாலை செயற்பாடுகள் ஆரம்பம்!

கொரோனா வைரஸ் பரவலையடுத்து மூடப்பட்ட பாடசாலைகள் 105 நாட்களுக்கு பிறகு இன்று (29) திறக்கப்பட்டன.

ஐந்து கட்டங்களின்கீழ் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன.

இதன்படி இன்றைய தினம் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பாடசாலைகளுக்கு வருகை தந்தனர்.

மலையகத்திலுள்ள பாடசாலைகளிலும் ஆசிரியர்கள் சமூகமளித்திருந்தனர். அவர்களிற்கு சுகாதார நடைமுறைகள் குறித்த விளக்கங்களை பொதுச்சுகாதார பரிசோதர்கள், பொலிசார் வழங்கிய பின்னர், கடமைகளை ஆரம்பித்தனர்.

நேர அட்டவணை, பாடத் திட்டம் உட்பட சில பணிகள் இவ்வாரம் முன்னெடுக்கப்படவுள்ளன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here