மட்டக்களப்பில் கொடூரம்: மனைவியை கொன்ற கணவன்!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவில் கணவனால் கொல்லப்பட்ட மனைவியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடி சரஸ்வதி வித்தியாலய வீதியில் இரண்டு பிள்ளைகளின் தாய் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) கொலை செய்யப்பட்டுள்ளார்.

34 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான துர்க்கா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மரணம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவர் களுவாஞ்சிகுடி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கணவனுக்கும் மனைவிக்கும் ஏற்பட்ட குடும்ப தகறாறு காரணமாக எனது மகளை அவரது கணவரான எனது மருமகனே கொலை செய்துள்ளார் என குறித்த பெண்ணின் தாயாரான தேவநேசராசா சாந்தநிதி தெரிவித்தார்.

இக்கொலைச் சம்பவம் இன்று காலை 6 மணியளவில் அவரது வீட்டில் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் ஸ்தலத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிசாரும், மட்டக்களப்பு தடயவியல் பொலிஸ் பிரிவும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here