வனிதா- பீட்டர்பால் திருமணம் சட்டபூர்வம் அற்றது: முதல் மனைவி புகார்!

நடிகை வனிதா மற்றும் பீட்டர் பால் திருமணம் நேற்று நடைபெற்ற நிலையில் கோலிவுட் திரையுலகமே இந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் பீட்டர் பாலுடன் புதிய வாழ்க்கை தொடங்க வனிதா தொடங்கியிருக்கும் நிலையில் திடீரென பீட்டரின் முதல் மனைவி சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பீட்டர் பாலுடன் தனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் தனக்கு முறையாக விவாகரத்து அளிக்காமல் வனிதாவை அவர் திருமணம் செய்து கொண்டதாக எலிசபெத் ஹெலன் என்பவர் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

தாங்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்வதாகவும் இருப்பினும் இன்னும் முறையாக விவாகரத்து பெறவில்லை என்றும் அவர் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாக கூறபடுகிறது.

பீட்டர்பால் தனக்கு விவாகரத்து அளித்த பிறகே வனிதாவை திருமணம் செய்து கொள்வேன் என தன்னிடம் கூறியதாகவும், ஆனால் தற்போது தான் கூறியதை பின்பற்றாமல் நேற்று வனிதாவை திருமணம் செய்து கொண்டதாகவும் இதனை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எலிசபெத் ஹெலன் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here