வவுனியாவில் அரசியல் கைதியின் வீட்டில் விசித்திரம்: 8 கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி!


வவுனியா நெடுங்கேணி நைனாமடுப்பகுதியில் எட்டுக்கால்களுடன் ஆட்டுக்குட்டி ஒன்று நேற்றைய தினம் 3 மணியளவில் பிறந்துள்ளது.

நைனாமடுப் பகுதியில் சீதாகோபால் ஆறுமுகம் எனும் அரசியல் கைதி ஒருவரின் வீட்டிலையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவரது குடும்பம் 2017 ஆம் ஆண்டில் இருந்து வாழ்வாதாரத்துக்காக ஆடுகளை வீட்டில் வளர்த்து வந்துள்ளார். இதில் ஒரு ஆடுதான் அதிசய குட்டியினை ஈன்ற ஆடு. இவ் ஆடு கடந்த ஆண்டு இரண்டு ஆட்டுக்குட்டிகளை இறந்த நிலையிலையே ஈன்றுள்ளது. பின்னர் நேற்றையதினம் இந்த ஆடு 3 மணியளவில் 8 கால் ஆட்டு குட்டி ஒன்றினை ஈன்றுள்ளது.

இந்த ஆட்டுக்குட்டி வழக்கமான முறையில் நான்கு கால்களை கொண்டிருந்தாலும் மேலதிகமாக நான்கு கால்களையும் கொண்டு ஒரு தலையுடன் பிறந்தது அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளது.

இருந்த போதும் இவ் ஆட்டுக்குட்டி இறந்த நிலையிலேயே பிறந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆயினும் இலங்கையில் இப்படி ஒரு அதிசயம் முதன்முதலாக இடம்பெற்றுள்ளது என இத் தகவல் பரவியதை அடுத்து சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மக்கள் எட்டுகால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டியை ஆர்வமுடன் பார்வையிட்டு செல்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here