105 நாளின் பின் நாளை பாடசாலைகள் ஆரம்பம்: கற்றல் செயற்பாட்டை தீர்மானிப்பது எப்படி?

நாடு முழுவதும் நாளை (29) கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கின்றன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பூட்டப்பட்ட பாடசாலைகள் 105 நாளின் பின், 5 கட்டங்களாக ஆரம்பிக்கின்றது. நாளை முதற்கட்டமாக, பாடசாலைகள் ஆரம்பிக்கிறது.

இதன்போது, தொற்று நீக்கல், சுத்திகரித்தல், பாட அட்டவணை தயாரித்தல் உள்ளிட்ட முன்னாயத்த பணிகள் இடம்பெறும்.

நாளைய தினம் பாடசாலை ஆரம்பித்த பின்னர், கற்றல் செயற்பாடுகளிற்கான திட்டமிடல் குறித்து, கல்வியமைச்சு வெளியிட்ட சுற்று நிருபம் தொடர்பில், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் ஆ.தீபன் திலீசன் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அந்த குறிப்பில்-

1 பாடவேளை 1 மணிநேரமாக திட்டமிடப்படும்.
இச் சுற்று நிருபத்தின் 02 வது பிரிவில் விடயங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
குறித்த பாட ஆசிரியர் தனது பாடவேளை ஆரம்பமாவதற்கு முன் 30 நிமிடங்களுக்கு முன் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும்.
உதாரணமாக -ஒரு ஆசிரியருக்கு 11.00 மணிக்கே முதற்பாடம் ஆரம்பமாகுமாயின் – 10.30 மணிக்கு சென்றால் போதுமானது.
அவர் காலை 7.30 மணிக்கே செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை.
அத்துடன் – பி.ப 3.30 மணிவரை கற்பிக்கும் தேவை ஏற்படுமாயின் ஒரே ஆசிரியர் வாரத்தின் 5 நாட்களும் ஈடுபடாத வகையிலேயே நேரசூசி தயாரிக்கப்பட வேண்டும்.
வாரத்தில் 1நாள் ஒரு ஆசிரியர் 3.30 மணிவரை நிற்கக்கூடியவாறே நேரசூசி தயாரிக்கலாம்.
இதனை அடிப்படையாகக் கொண்டு 3.30மணி வரை நிற்க வேண்டிய ஆசிரியருக்கு – அன்றைய தினம் முதல் பாடவேளையை பிந்திய நேரமொன்றுக்கு வழங்கி நடைமுறைப்படுத்துவது தொடர்பாகத் திட்டமிடலாம்.
இந்தத் திட்டமிடலுக்காகவே – முதல்வாரம் ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் தரப்பட்டுள்ளது. இரு தரப்பினரும் கலந்துரையாடி ஆரோக்கியமாக நேரசூசி தயாரித்து கற்பித்தலைத் திட்டமிட வேண்டும்.
பாடசாலை மட்டங்களில் இத்தகைய விடயங்களைத் திட்டமிடலாம் என சுற்றுநிருபம் கூறுகிறது. இந்த திட்டமிடலில் எல்லா பாடசாலைகளுக்கும் பொதுவான பொதுக்கட்டமைப்பு உருவாக்கத் தேவையில்லை. ஆசிரிய ஆளணியைப் பொறுத்து தனித்தனியாக திட்டமிடலாம்.
இந்த நடைமுறைகளுக்காகவே- தனியான ஆவணமொன்றில் கையொப்பமிட இந்தச் சுற்றுநிருபம் கூறுகிறது. லீவு எடுப்பதாக இருந்தால் – குறித்த ஆசிரியரின் பாடவேளைக்கு பதிலீட்டு ஆசிரியரை வழங்கி லீவு எடுக்கவும் இந்த சுற்றுநிருபம் அனுமதிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here