இந்தவார ராசி பலன்கள் (5.7.2020- 11.7.2020)


சுக்ரன், ராகு, புதன் நலம் தரும் அமைப்பில் உள்ளனர். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழில் தொடங்குபவர்களுக்கு எதிர்பார்த்த வங்கியில் கடனுதவி கிடைக்கும். சின்னச் சின்ன ஆரோக்கிய பிரச்னைகள் வந்து போகும். எதிரிகளால் ஏற்பட்டிருந்த தொல்லைகள் நீங்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி பேச்சுவார்த்தைகளை இப்போதைக்கு தள்ளி வைப்பது நல்லது. பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் வளரும். நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.

பரிகாரம் : குரு வழிபாடு சுபவாழ்வு தரும்.

சந்திரன், செவ்வாய், சுக்கிரன் நன்மை செய்யும் அமைப்பில் உள்ளனர். கவலை தீர்ந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிலும் உத்வேகத்துடன் செயலாற்றுவீர்கள். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். வருமானம் பெருகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்வது நல்லது. குடும்ப நலத்தில் மிகுந்த அக்கறை கொள்வீர்கள். வாகனப் பயணத்தில் மிதவேகத்தை பின்பற்றவும். பெண்கள் அன்றாடப் பணிகளில் கவனத்துடன் செயல்படவும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். சேமிப்பை அதிகப்படுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் : 5.7.2020 காலை 6:00 – 6.7.2020 காலை 6:16 மணி
பரிகாரம் : சிவன் வழிபாடு சிரமத்தை போக்கும்.

செவ்வாய், சந்திரனால் ராஜயோக பலன் உண்டு. விரக்தி மனப்பான்மை மாறி சந்தோஷம் அதிகரிக்கும். குடும்பத்தில் இதுநாள் வரை இருந்த நெருக்கடி தீரும். திடீர் பணவரவு இருக்கும். நிலுவைப் பணிகளை முடித்து நிம்மதி அடைவீர்கள். கணவன், மனைவி இடையே வீண்வாக்குவாதங்கள் வந்து போகும். பெற்றோர் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள். சுபநிகழ்ச்சி பற்றிய பேச்சுவார்த்தையை இப்போதைக்கு ஒத்தி வைக்கவும். தொழிலில் புதிய முதலீடுகளை அளவோடு செய்வது நல்லது. சொந்த விஷயங்களுக்காக அடுத்தவரிடம் ஆலோசனை கேட்பதை தவிர்க்கவும்.

சந்திராஷ்டமம் : 6.7.2020 காலை 6:17 – 8.7.2020 பகல் 2:16 மணி
பரிகாரம் : துர்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.

புதன், சுக்கிரன், குரு சுபபலன் தரும் விதத்தில் உள்ளனர். மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். வருமானத்திற்கு தகுந்தாற்போல் செலவுகளும் வரும். அலுவலகத்தில் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு நல்ல பெயரெடுப்பீர்கள். தந்தையின் உடல் நலனில் சிறு சிறு உபாதைகள் வந்து நீங்கும். அக்கம் பக்கத்தினரிடம் பேசும்போது நிதானம் தேவை. திருமணம் பற்றிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் உண்டு. வியாபாரத்தில் சில புதிய மாற்றங்களை செய்து லாபத்தை பெருக்குவீர்கள். பகை பாராட்டிய உறவினர்கள் இணைந்து கொள்வார்கள்.

சந்திராஷ்டமம் : 8.7.2020 பகல் 2:17 – 10.7.2020 நள்ளிரவு 12:33 மணி
பரிகாரம் : பைரவர் வழிபாடு நன்மை தரும்.

சூரியன், ராகு, புதன், சுக்கிரன் அனுகூல பலனை தருவர். அதிர்ஷ்ட வாய்ப்பை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். திடீர்ப் பணவரவு இருப்பதால் வங்கி சேமிப்பை அதிகப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கை எட்டுவீர்கள். சகஊழியர்களை அனுசரித்துச் சென்றால் நிலுவைப் பணிகளை எளிதில் முடிக்கலாம். உங்களின் பேச்சினை சிலர் தவறாக புரிந்து கொள்ளக்கூடும் என்பதால் எச்சரிக்கையாகப் பேச வேண்டும். பெண்களுக்கு வீட்டிலும், அலுவலகத்திலும் மதிப்பு கூடும். தெய்வ வழிபாடு மனஅமைதி தரும்.

சந்திராஷ்டமம் : 10.7.2020 நள்ளிரவு 12:34 – 11.7.2020 நாள் முழுவதும்
பரிகாரம் : ராமர் வழிபாடு ஆரோக்கியம் தரும்.

புதன், சுக்கிரன். சந்திரன் கூடுதல் நற்பலன்களை வழங்குவர். விவேகத்துடன் செயல்பட்டால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெறலாம். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். உங்களின் கருத்துக்களை மற்றவர்களிடம் கூறும்போது சரியான சொற்களைத் தேர்ந்தெடுத்து பேசுவது நல்லது. குடும்பத்தினருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பர். தொழிலில் இருந்த மறைமுக போட்டி அகலும். தனிப்பட்ட வாழ்க்கையில் புதிய மாற்றத்தை சந்திப்பீர்கள். பணியாளர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். மனைவியின் அன்பில் மகிழ்வீர்கள்.

பரிகாரம் : காமாட்சி வழிபாடு சகல நன்மை தரும்.

குரு, சனி, கேது அதிர்ஷ்ட பலன்களை தரும் விதத்தில் உள்ளனர். எதிர்பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை. உங்களின் நீண்ட நாளைய ஆசைகள் நிறைவேறும். சிலருக்கு பொருள் சேர்க்கை உண்டு. உறவினரிடம் கடந்தகால நினைவுகளை கூறி மகிழ்ச்சி கொள்வீர்கள். அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிப்பதால் மனஅழுத்தம் ஏற்படலாம். வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு வரும். சிறு சிறு உடல் உபாதைகள் வந்து போகும். பாதியில் நின்ற கட்டிட வேலைகளை தொடங்குவீர்கள். நண்பரிடம் எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம்.

பரிகாரம் : சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

புதன், சுக்கிரன், சந்திரன் நன்மை தரும் விதத்தில் உள்ளனர். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம். அலுவலக நண்பர்களை பகைத்து கொள்ளாதீர்கள். திட்டமிட்டு செயல்பட்டால் முயற்சியில் வெற்றி பெறலாம். தந்தை நலம் சற்றே பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அரசாங்க விஷயங்கள் அலைச்சலுக்கு பிறகு கூடிவரும். வாகன வகையில் பழுது பார்க்கும் செலவுகள் உண்டாகும். பெண்களுக்கு தோழிகளால் சில சங்கடங்கள் வரலாம். பணப்புழக்கம் அதிகரிப்பதால் பழைய கடன்களை அடைப்பீர்கள். குடும்ப நலனில் அக்கறை கொள்வீர்கள்.

பரிகாரம் : சாஸ்தா வழிபாடு துன்பம் போக்கும்.

புதன், குரு, சந்திரன் அதிகப்படியான நற்பலன்களை தருவர். கணவன், மனைவி இடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். நீண்ட நாளாக தள்ளிப்போன விஷயங்கள் முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். தேவையற்ற எதிர்மறை விஷயங்களைச் சிந்திப்பதை தவிர்க்கவும். பிள்ளைகளின் செயல்பாடுகளால் மனவருத்தம் ஏற்படலாம். பூர்வ சொத்து விஷயமாக அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். தாய்மாமன் வகையில் உதவி உண்டு. பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் சற்று விட்டு கொடுத்து செல்வது நல்லது. திருமணப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும்.

பரிகாரம் : அனுமன் வழிபாடு வெற்றி தரும்.

கேது, செவ்வாய், சுக்கிரனால் நன்மை உண்டு. உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பணிபுரியும் பெண்கள் புதிய இரண்டு சக்கர வாகனம் வாங்கி மகிழ்வர். தாய் மாமனிடமிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வரவேண்டிய பணம் கைக்கு வரும். வட்டிக்கு வாங்கிய கடனை அடைப்பீர்கள். நண்பர்கள் தங்களின் குடும்ப விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்வர். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் கிடைக்கும். மனதில் இருந்த கவலைகள் மறைந்து மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளால் பெருமிதம் உண்டாகும். எதிரிகள் மனம் மாறும் சூழல் உருவாகும்.

பரிகாரம் : பெருமாள் வழிபாடு நல்வாழ்வு தரும்.

குரு, சனி, கேது, சந்திரனால் நற்பலன் கிடைக்கும். திட்டமிட்ட செயல்களில் வெற்றி பெறுவீர்கள். பணியாளர்களுக்கு இருந்த கவனச்சிதறல் நீங்கி பணியில் ஆர்வம் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் நிலவும். சகோதரியின் திருமண விஷயமாக நல்ல வரன் கூடிவரும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பேரன், பேத்திகள் மூலம் சிறு சிறு செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனஅழுத்தம் குறையும். உறவினருடன் இருந்த மனஸ்தாபங்களை உங்களின் மனைவி சரிசெய்துவிடுவார்.

பரிகாரம் : நரசிம்மர் வழிபாடு பயம் போக்கும்.

குரு, புதன், சுக்கிரன் உதவி செய்யும் நிலையில் உள்ளனர். மனஅழுத்தம் நீங்கி உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். பெண்கள் உடல் நலனில் மிகுந்த அக்கறை கொள்ளவும். வீட்டில் பராமரிப்புச் செலவுகள் உண்டாகும். தாய் வழி உறவுகளிடையே சில மன வருத்தங்கள் ஏற்படலாம். அலுவலக பயண திட்டத்தில் திடீர் மாற்றங்கள் வரலாம். வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீதிமன்ற வழக்குகளில் இருந்து மீளுவீர்கள். பொதுநலப் பணியில் ஈடுபட்டு மகிழ்ச்சி காண்பீர்கள். தொழில் வளர்ச்சியைப் பெருக்கிக் கொள்ள புதிய வாய்ப்புகள் உருவாகும்.

பரிகாரம் : விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here