வவுனியா பாடசாலையில் திருட்டு!

வவுனியா நகரில் அமைந்துள்ள இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் திருட்டு சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பாடசாலைக்குள் நேற்றயதினம் உள்நுழைந்த இனம்தெரியாத நபர்கள் பாடசாலையின் கூட்டுறவு அலுவலகத்தை உடைத்து அங்கிருந்த பொருட்களை திருடிச்சென்றுள்ளனர்.

திருட்டுசம்பவத்தில் 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக அறிந்த பாடசாலையின் முதல்வர் வவுனியா பொலிசாருக்கு தெரிவித்திருந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here