குழப்பவாதிகளின் வீண் செயல்களை வன்மையாக கண்டிக்கின்றேன்: ஜி.ரி.லிங்கநாதன்

விசமப்பிரச்சாரம் செய்யும் சில்லறை குழப்பவாதிகளின் வீண் செயல்களை வன்மையாக கண்டிப்பதாக ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார்.

குளிர்பான போத்தல்களில் லிங்கநாதனது தேர்தல் பிரச்சார அட்டைகளை காட்சிப்படுத்தியமை தொடர்பாக இணையதளங்களில் வெளிவந்துள்ள செய்திக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக அவர் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எனது அதிகரித்த செல்வாக்கினை மழுங்கடிக்க எனது தேர்தல் பிரச்சார அட்டைகளை பெற்று வவுனியா வடக்கில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் குளிர்பான போத்தகளில் ஒட்டி விசம பிரச்சாரம் ஒன்றை முன்னெடுத்தமையை வன்மையாக கண்டிக்கின்றேன்.

இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளும் விசமிகளை மக்கள் நன்கறிவார்கள். வவுனியா நகரசபை தலைவராகவும், வடக்கு மாகாணசபை உறுப்பினராகவும் இருந்த காலப்பகுதி தொடக்கம் இன்றுவரை மக்களால் நன்கு அறியப்பட்டவன் நான் என்ற ரீதியில் இவ்வாறான கீழ்த்தரமான அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எனக்கில்லை.

நேர்மையானதாகவும், தூய்மையானதாகவும் மேற்கொள்ள வேண்டிய அரசியலில், காழ்ப்புணர்ச்சி காரணமாக கேவலமான செயற்பாடுகளை மேற்கொள்ளும் விசமிகள் சமூகத்தின் கொடிய நோய்களாகவே இருப்பர் எனவும் ஜி.ரி.லிங்கநாதன் அனுப்பியுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here