மீள் சோதனையில் 6 பாகிஸ்தான் வீரர்களிற்கு கொரோனா இல்லை!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் 10 வீரர்கள் கொரோனா தொற்றிற்குள்ளாகியதாக முன்னர் கண்டறியப்பட்ட போதும், தற்போது அவர்களில் 6 வீரர்களிற்கு தொற்று இல்லையென்பது உறுதியானதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இன்று நடத்தப்பட்ட மீள் பரிசோதனையில் 6 வீரர்களிற்கு தொற்று இல்லையென்பது உறுதியானது.

தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட 10 வீரர்களும் இன்று மீளவும் சோதனைக்குட்படுத்தப்பட்டனர். அவர்களில், ஃபக்கர் ஜமான், முகமட் ஹஸ்னைன், முகமட் ஹபீஸ், முகமட் ரிஸ்வான், சதாப் கான் மற்றும் வஹாப் ரியாஸ் ஆகியோருக்கு தொற்று இல்லையென்பது உறுதியானது.

ஏற்கனவே தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட ஹைதர் அலி, ஹரிஸ் ரவூப், காஷிஃப் பட்டி மற்றும் இம்ரான் கான் ஆகிய 4 வீரர்களிற்கும், இன்றைய பரிசோதனையிலும் தொற்று உறுதியானது. அணியின் உதவியாளர் மலாங் அலியும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

நாளை ஞாயிற்றுக்கிழமை 20 பேர் கொண்ட பாகிஸ்தான் குழு இங்கிலாந்து புறப்படுகிறது. தற்போது தொற்று இல்லையென உறுதியான வீரர்கள் மீண்டுமொரு பரிசோதனையின் பின்னர் அடுத்த வாரத்திற்குள் இங்கிலாந்து புறப்படுவார்கள்.

இங்கிலாந்து செல்லும் பாகிஸ்தான் வீரர்கள் 14 நாள் தனிமைப்படுத்தப்பட்டு, பிசிஆர் பரிசோதனையின் பின்னர் ஜூலை 13ஆம் திகதி பயிற்சிக்காக அனுமதிக்கப்படுவார்கள்.

நாளை இங்கிலாந்து புறப்படும் பாகிஸ்தான் அணி விபரம்- அசார் அலி (கப்டன்), பாபர் அசாம் (துணை கப்டன்), ஆபிட் அலி, ஆசாத் ஷபிக், பஹீம் அஷ்ரப், ஃபவாத் ஆலம், இப்திகார் அகமது, இமாத் வாசிம், இமாம் உல் ஹக், குஷ்டில் ஷா, முகமட் அப்பாஸ், மூசா கான், நசீம் ஷா, ரோஹைல் நசீர், சர்பராஸ் அகமட், ஷாஹீன் ஷா அப்ரிடி, ஷான் மசூத், சோஹைல் கான், உஸ்மான் ஷின்வாரி, யாசிர் ஷா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here