போதைப்பொருள் வியாபாரம்… 30 மில்லியன் சொத்து: போதைப்பொருள் தடுப்பு பிரிவின் 4 பொலிசார் கைது!

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவை சேர்ந்த 4 அதிகாரிகள் உள்ளிட்ட 5 பேர், குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

பொதைப்பொருள் தடுப்பு பிரிவை சேர்ந்த 4 பேர், ஒரு பொதுமகன் கைதாகியுள்ளார்.

இவர்கள், போதைப்பொருள் விநியோகம் மற்றும் கைதான பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தப்பிக்க உதவியது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களிற்கு உள்ளாகியிருந்தனர்.

அவர்கள் எப்படி போதைப்பொருள் கடத்தல்காரர்களிற்கு உதவினார்கள் என்பது குறித்து கடந்த சில தினங்களாக சிங்கள ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர், அவர்களிடம் தொடர்ந்து வாக்குமூலம் பெற்று வந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடனான தொடர்பின் மூலம் அவர்கள் 311இலட்சத்திற்கும் அதிக பணத்தை ஈட்டியிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. நிலம், கார், மோட்டார் சைக்கிள்கள், பணம் ஆகியவற்றை அவர்கள் பெற்றுள்ளனர்.

பிலியந்தலையில் சில வருடங்களின் முன்னர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒரு அதிகாரி கொல்லப்பட்டிருந்தார். இந்த சம்பவத்திற்கும் கைதானவர்களிற்கும் ஏதாவது தொடர்புள்ளதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here