வெற்றிடமான மலையக அரசியல் தலைமைத்துவத்தை ஏற்கத் தயார்; தசாவதாரம் எடுப்பேன்: வடிவேல் சுரேஷ்!

மலையக அரசியல் தலைமைத்துவத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. வெற்றிடத்தை பூர்த்தி செய்ய மக்கள் எனக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறார்கள். மக்களின் ஆணை ஏகோபித்த நிலையில் இருப்பதால், அந்த அழைப்பை நான் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது உறவுகளின் அழைப்பின் பிரகாரம் மலையக அரசியல் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன். எமது உறவுகள் யாருக்கும் அஞ்சவோ, பின்வாங்கவோ தேவையில்லை. அரசியல், தொழிற்சங்க பேதங்களிற்கு அப்பால் எமது உறவுகளிற்கு ஏற்படும் அநீதிகளிற்கு எதிராக நீதிமன்றம் வரை சென்று தலைமைதாங்கவும் பின்னிற்க மாட்டேன்.

இ.தொ.கவின் தலைவர் ஆறுமுகன் தொண்டமாக துரதிஷ்டவசமாக எம்மை விட்டு பிரிந்து விட்டார். இந்த நிலையில், தலைமை பொறுப்பை ஏற்பதற்கான தார்மீக பொறுப்பு எனக்கு உண்டென்பதை அறிவேன்.

ஆறுமுகன் தொண்டமான் மறைந்து விட்டார், இனி மலையக மக்களை ஆட்டிப்படைக்கலாம், அடிமைகளாக வைத்திருக்கலாம், வஞ்சிக்கலாமென எவராவதுநினைப்பார்களாக இருந்தால் அதனை எதிர்த்து வடிவேல் சுரேஷ் தசாவதாரம் எடுக்க வேண்டிய நிலை வரும்.

எமது மக்களையும், சமூகத்தையும் பாதுகாக்க எந்த எல்லை வரையும் செல்வேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here