அனுமதியின்றி 30 மாடுகளை கொண்டு சென்ற 8 பேர் கைது!

வவுனியா புளியங்குளம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட நொச்சிகுளம் பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி கொண்டுசெல்லபட்ட 30 மாடுகளை பொலிசார் இன்று மீட்டுள்ளனர்.

நொச்சிகுளம் பகுதியில் இன்று காலை 5 மணியளவில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார் அவ்வீதிவயால் வருகைதந்த நான்கு வாகனங்களை வழிமறித்து சோதனைசெய்தனர்.

இதன்போது குறித்த வாகனங்களில்30 மாடுகள் அனுமதிப்பத்திரம் இன்றி கொண்டுசெல்லப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

வாகனத்தில் பயணித்த அனுராதபுரத்தை சேர்ந்த 8 பேரை கைதுசெய்த பொலிசார்.வாகனங்களையும்,மாடுகளையும் புளியங்குளம் பொலிஸ்நிலையத்திற்கு எடுத்துச்சென்றனர்.

கைப்பற்றப்பட்ட மாடுகள் மருதோடை பகுதியிலிருந்து அனுராதபுரம் நோக்கிஎடுத்துச்செல்லப்படவிருந்
ததுடன், அவற்றை எடுத்துச்செல்லவதற்கான அனுமதிப்பத்திரம் அவர்களிடம் இருக்கவில்லை என்று தெரிவித்த பொலிசார் கைப்பற்றப்பட்ட மாடுகள் அதன் உரிமையாளர்களிடம் இருந்து கொள்வனவுசெயப்படதா அல்லது களவாடப்பட்டதா என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தனர்.

இக்கைது நடவடிக்கை பிரதான பொலிஸ் பரிசோதகர் அத்தனாயக்கவின் வழிகாட்டலில் சாயன்காளான யெயசூரியா(34177) மற்றும் றத்நாயக்க(49720) கான்ஸ்டிபிள்காளான செனரத்தின(67103) குமார, பொலிஸ் சாரதியான றஞ்சித் ஆகியோரை கொண்ட பொலிஸ்குழுவினரால் முன்னெடுக்கப்பட்டிருந்துது. (384570)

கைதுசெய்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆயர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here