1990 அம்புலன்ஸ் கைவிட்டது: கிளிநொச்சி மாணவன் மரணம்!

கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் மைதானத்தில் கால்பந்தாட்ட கோல் கம்பம் சரிந்ததில் சிக்குண்டு கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவன் ஒருவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது.

கிளிநொச்சி கனகாம்பிகை குளத்தை சேர்ந்த கிளிநொச்சி மத்திய கல்லூரியில் 2020 உயர்தரப் பிரிவில் கல்வி கற்கும் மோகனதாஸ் மதியமுதன் என்ற மாணவனே உயிரிழந்தார்.

“தனியார் கல்வி நிலையத்திற்கு சென்ற பின்னர், கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் மைதானத்தில் விளையாடச் சென்றபோது உதைபந்து கோல் கம்பம் விழுந்ததில் அவர் காயமடைந்துள்ளார்.

இதனையடுத்து 1990 அம்புலன்ஸ்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அம்புலன்ஸ் உரிய நேரத்தில் வரவில்லை. அவர்களால் சம்பவம் நிகழ்ந்த இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

பின்னர் முச்சக்கரவண்டி ஒன்றில் மாணவனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது வழியில் மாணவனின் உயிர் பிரிந்துவிட்டது” என்று சக மாணவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here