முகக்கவசம் அணியாமல் முகத்திற்கு அருகில் வந்து குறுக்கு விசாரணை செய்கிறார்: சட்டத்தரணிக்கு எதிராக யாழ் நீதின்றில் சுவாரஸ்ய முறைப்பாடு!

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கொன்றின் போது முகக்கவசம் அணியாது சட்டத்தரணி நெருங்கி வந்து குறுக்கு விசாரணை செய்வது குறித்து சாட்சி, மன்றில் முறையிட்ட சுவாரஸ்ய சம்பவம் இடம்பெற்றது.

இதையடுத்து, சமூக இடைவெளியை பேணி, சாட்சியை குறுக்கு விசாரணை செய்யுமாறு மன்று, சட்டத்தரணியை அறிவுறுத்தியது.

6 இலட்சம் ரூபா பணத்தை வாங்கி நம்பிக்கை மோசடி செய்ததாக ஒரவர் மீது அரசியல்வாதியான மு.தம்பிராசா முன்வைத்த குற்றச்சாட்டு குறித்த விசாரணை யாழ் நீதிமன்றத்தில் இடம்பெற்றபோது, இந்த சம்பவம் நடந்தது.

நேற்று முன்தினம் நடந்த வழக்கு விசாரணையில், எதிராளி தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி மு.ரெமீடியஸ், சாட்சியான மு.தம்பிராசாவை சுமார் ஒரு மணித்தியாலம் குடைந்து குடைந்து குறுக்கு விசாரணை நடத்திக் கொண்டிருந்தார்.

இதன்போது, எதிராளி தரப்பு சட்டத்தரணி முகக்கவசம் அணியாமல் தனது முகத்திற்கு அருகில் தனது முகத்தை கொண்டு வந்து, குறுக்கு விசாரணை செய்வதாக தம்பிராசா, நீதிவானிடம் முறையிட்டார்.

இதையடுத்து, சமூக இடைவெளியை பேணி குறுக்கு விசாரணை நடத்த மன்று அறிவுறுத்தியது.

பின்னர், இடைவெளியை பேணி, குறுக்கு விசாரணையை தொடர்ந்தார் சட்டத்தரணி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here